பழனி என்பவர் ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார் ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம் என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,
அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும் தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,
கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...
ஹிந்துஸ்தான் மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்

சூப்பர் மகி உங்கள் நற்சேவை என்றும் இன் நாட்டிற்க்குத் தேவை...........
ReplyDelete