Sunday, September 11, 2011

அன்னக்கொடை...

அன்னக்கொடை
அன்னதானம் ( மகேந்திரன் )  என்னுடைய நீண்டநாள் கனவு...
கோவில் விழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, போன்ற விழாக்களில் எல்லோரும் அன்னதானம் செய்கிறார்கள்...
இன்னும் சிலபேர் உணவு மீதமானதால் அதை அன்னதானமாக செய்கிறார்கள், இதில் சாப்பிட வருகிறவர்கள்  வசதியானவர்கள்,
வசதியற்றவர்கள், வழிப்போக்கர்கள் என வருகிறார்கள் சிலபேர் போதையிலும் வருகிறார்கள்...
இதில் எனக்கு உடன்பாடில்லை,
எத்தனையோ பேர் உறவுகள் அறியாமல் தாய் தந்தை இழந்து எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்று கூடதெரியாமல் உடுத்த உடை இல்லாமல் உன்ன உணவு இல்லாமல், படிக்கவும் வழி இல்லாமல் இருந்து வருகிறார்கள்,
அவர்களுக்கு வயிறார உணவு வழங்குவதே அன்னதானம் என மனதில் பட்டது...


அதை செயல்படுத்த நானும் எனது நண்பர்களும் (தபசுராஜ் , கண்ணன் , மகேஷ் , அருள்ராஜ்) முடிவு செய்து பொதுமக்களுடன் இணைந்து வாரம் ஒருநாள் ஞாயிறு மதிய வேளையில் 100 ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்,
இன்றோடு (11/09/2011) 25 வது வாரம் ஆகிறது...
இந்த சேவையில் தாங்களும் பங்குகொள்ள விரும்புகிறோம்...
முடிந்தவரை செய்கிறோம்...!
முடிந்தால் எல்லாநாளும் எல்லாவேளையிலும் செய்வோம்...!
வாருங்கள்...!
தொடர்புக்கு 9843344991 


இன்றைய அன்னக்கொடை 25/09/11 G .கந்தசாமி


நமது நண்பர் கோவையை சேர்ந்த  G .கந்தசாமி, (9443911381) என்பவர் தனது 40 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் , நாம் அன்னக்கொடையுடன் இணைந்து இந்த மதியவேளை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்தார் ,

இன்றைய அன்னக்கொடை 02/10/11
Uma Ganesh Iyer
கார்னர் ஸ்டோன்
அன்னக்கொடை ஆதரவற்ற குழைதைகளுக்கு மதிய உணவு வழங்கிட நமது facebook தோழி
Uma Ganesh Iyer அவர்கள் இரண்டாயிரம் ருபாய் அனுப்பி வைத்திருந்தார் , அதனை கொண்டு இன்று 02/10/2011 கார்னர் ஸ்டோன் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது, 

இன்றைய அன்னக்கொடை 09/10/11  பொன்னையா கண்ணன் facebook நண்பர் 

கோவை மணியகாரன் பாளையத்தில் இமயம்  பெண்கள் இல்லம்  ,இங்கு கணவனாலும் ,குடும்பத்தராலும் கைவிடப்பட்ட அபலை பெண்களுக்கு இன்று ஞாயிற்று கிழமை மதியம் பசிக்கு உணவு வழங்கப்பட்டது இதில் நமது face book நண்பர்
Ponnaiah kannan நேரில் கலந்துக்கொண்டார்...
~மகேந்திரன்

3 comments:

  1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவார்..
    உங்கல் சேவையில் பங்கு பெற ஆவல்.. உங்களை 3 மாதம் கழித்து தொடர்பு கொள்கிறேன்

    ReplyDelete
  2. மனிதநேய மலர் வேண்டும்

    ReplyDelete