உன்னைவிட
நான்
ஒன்றும்
அவளவு அழகு இல்லை...
ஆனாலும்
உன்னோடு
நான்
இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இந்த
உலகிலேயே
நான் தான் பேரழகனாய்
தெரிகிறேன்..!
உன்
துன்பங்களுக்கு
என்
தோள்களுக்கு மட்டுமே
பாரமாக இருக்க வேண்டும்
என்று
நீ
விண்ணப்பிக்கும் போது
இருந்த
துன்பங்கள் எல்லாம்
எங்குப்போய் தொலைந்ததோ..!?
உன்னுடைய
கோவங்கள் எல்லாவற்றையும்
எவனோ
ஒருவனுக்காக
சமாதானம் ஆகிறது...
அந்த
எவனோ ஒருவன்
நான் என இருக்கும் போது
உன்னை
நேசிக்காமல்
எப்படி அடி இருக்க
முடியும்..!

உனக்கு
எதெல்லாம் பிடிக்காது
என்று
எனக்கு கற்றுத்தரும்
உன்
கோவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்..!
சிலநேரம்
உன்னை நினைப்பதை கூட
நிறுத்திவிட்டு
துடிக்க பார்க்கிறது
என் இதயம்...
வெட்டியாக
எதற்கு துடிக்கனும்
என்று தெரியவில்லை...
உன்னை நினைத்தாலே
நூறுவருடம் வாழ்வேனே..!
துன்பம் தொலைந்த கவிதை நன்று
ReplyDeleteநன்றிங்க பிரேம் :)
ReplyDeleteதுன்பம் தொலைந்த கவிதையை எனது தளத்தின் கவிதை உலா பகுதியில் இணைத்துள்ளேன் நன்றி
ReplyDelete